பெரம்பூர் அருகே சாலையில் சென்ற கார் தலைக்குப்புற கவிழ்ந்தது


பெரம்பூர் அருகே சாலையில் சென்ற கார் தலைக்குப்புற கவிழ்ந்தது
x

பெரம்பூர் அருகே சாலையில் சென்ற கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னை

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை கீழ்பாக்கம் பகுதியில் வசிப்பவர் நிஷாந்த் (வயது 33). நேற்று இரவு இவர் பெரம்பூர் நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென கார் நிலை தடுமாறி நடைபாதை மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. அங்கிருந்தவர்கள் காரில் சிக்கிய நிஷாந்தை காயமின்றி மீட்டனர். தகவல் அறிந்த செம்பியம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்து காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story