லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு

லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு
x

சென்னையில் பைக் மோதியதில் பலியான பிளம்பரின் குடும்பத்துக்கு ரூ.41 லட்சத்து 42 ஆயிரம் இழப்பீடாக வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் பைக் மோதியதில் பலியான பிளம்பரின் குடும்பத்துக்கு ரூ.41 லட்சத்து 42 ஆயிரம் இழப்பீடாக வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பிளம்பர் ஜோசப் என்பவரது மரணத்திற்கு 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரது தாய் ஸ்டெல்லாவும், மனைவி சத்திய பிரியாவும் இணைந்து சென்னை மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி டி. சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பைக் ஓட்டிச் சென்ற தினேஷ் குமாருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், வாகனத்திற்கு காப்பீடும் செய்யப்படவில்லை என்றும் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து ஜோசப்பின் மரணத்திற்கு 41 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க, பைக் உரிமையாளர் சங்கருக்கும், அதை ஓட்டிச் சென்ற அவரது மகன் தினேஷ் குமாருக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகையை இருவரும் இணைந்து மூன்று மாதத்திற்குள் ஜோசப்பின் தாய், மனைவிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story