கவர்னர் பாதுகாப்பில் இருந்த பெண் காவலர் சாலையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!


x
தினத்தந்தி 10 Jun 2022 4:23 AM GMT (Updated: 10 Jun 2022 4:29 AM GMT)

கவர்னரின் பாதுகாப்புக்காக அன்னூர் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பெண் காவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் 5 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து காலை 11.30 மணி அளவில் ஊட்டியில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து 3.15 மணியளிவில் விமானம் மூலம் சென்னைக்கு சென்றார்.

அப்போது கவர்னரின் பாதுகாப்புக்காக கோவை மாவட்டம் நெகமம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் முத்து கல்யாணி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அவர் அன்னூர் ஜே ஜே நகர் பகுதியில் சாலையில் நின்றிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து சக காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story