ராணுவ வீரருக்கு செல்போன் மூலம் பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆசிரியர் கைது


ராணுவ வீரருக்கு செல்போன் மூலம் பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆசிரியர் கைது
x

ராணுவ வீரருக்கு செல்போன் மூலம் பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 49). ராணுவ வீரர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவருக்கு தங்கள் கட்சி தலைவரை எப்படி விமர்சித்து பதிவிடலாம் என கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தெரிகிறது. இந்த மிரட்டல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. விசாரணையில் மிரட்டல் விடுத்தது செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் மணிமாறன் (வயது 49) என்பது தெரியவந்தது. இவர் கல்பாக்கம்-புதுப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியாராக பணியாற்றியபோது அந்த பள்ளியில் படித்த 8-ம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பள்ளியில் இருந்து பணிநீக்கமும் செய்யப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்பாக்கம் அடுத்த பவுஞ்சூர் பகுதியில் குவாரி மண் ஏற்றி சென்ற மணல் லாரியை மடக்கி மணிமாறன் பணம் கேட்டு மிரட்டியதாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அணைக்கட்டு போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story