காதலில் கவுரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை - மக்கள் நீதி மய்யம்


காதலில் கவுரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை - மக்கள் நீதி மய்யம்
x

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியை கொலை செய்தது வேதனையளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, கொலை செய்தது வேதனையளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. மேலும் கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கொலை செய்வது கௌரவமா? கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச்சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை என்று மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும்.' என்று கூறியுள்ளது.



Next Story