திருவாரூர்: மழை வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு


திருவாரூர்: மழை வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
x

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கேட்டறிந்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் வடகண்டம் ஊராட்சிக்கு உட்பட்ட எட்டியலூர் கிராமத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தமிழ்நாடு அரசின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது விவசாயிகளிடம் அமைச்சர் சக்கரபாணி குறைகளை கேட்டறிந்தார். உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரடியாக வயலில் இறங்கி மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தியாகராஜன், மாவட்ட வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story