சென்னையின் 'செல்லப்பிள்ளை' டோனி தொடர்ந்து விளையாட வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


சென்னையின் செல்லப்பிள்ளை டோனி தொடர்ந்து விளையாட வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மற்றும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான துவக்க விழா மற்றும் இலச்சினை, சின்னம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,

சென்னையின் செல்லப்பிள்ளை டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேன். தோனி சொந்த உழைப்பில் வளர்ந்தவர், அதனால் தான் அவர் விளம்பர தூதராக உள்ளார். தமிழ்நாடு தத்தெடுத்துக்கொண்ட மகன் தோனி; லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு அவர் முன்னுதாரணமாக விளங்குகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் போல நானும் ஒரு டோனி ரசிகன் தான். தமிழ்நாட்டில் அனைத்து விளையாட்டுகளிலும் பல டோனிகளை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து நிறைய டோனிக்களை உருவாக்க விரும்புகிறோம்' என்றார்.


Next Story