உதயநிதி பிறந்தநாள்... வீட்டின் பாதுகாப்புக்கு இத்தனை அதிகாரிகளா..? அண்ணாமலை கண்டனம்


உதயநிதி பிறந்தநாள்... வீட்டின் பாதுகாப்புக்கு இத்தனை அதிகாரிகளா..? அண்ணாமலை கண்டனம்
x

எந்தெந்த காவல் மாவட்டத்தில் இருந்து எத்தனை போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான இன்று அவரது வீடு, சுற்றுப்புறம், வீட்டுக்கு செல்லும் சாலைகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

2 துணை கமிஷனர்கள், 10 உதவி கமிஷனர்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 90 சப்-இன்ஸ்பெக்டர்கள், 300 போலீசார், 380 ரிசர்வ் போலீசார் பணிக்கு அனுப்பப்பட்டு உள்ளார்கள். ஒரு வம்சத்தை மட்டும் காப்பதில் தங்கள் பொறுப்பு முடிந்துவிடாது என்பதை தமிழக அரசும், காவல்துறையும் உணர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எந்தெந்த காவல் மாவட்டத்தில் இருந்து எத்தனை போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.


Next Story