சினிமா மட்டுமல்ல, அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்தான்: பிரதமர் மோடி புகழாரம்
தனது நடிப்பால் மக்களின் மனங்களை வென்றவர் விஜயகாந்த் என்று பிரதமர் மோடி கூறினார்.
திருச்சி,
திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:-
"தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். 2023 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக மக்கள் அதிக வலிகளை அனுபவித்துள்ளீர்கள். 'சினிமா மட்டுமல்ல, அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்தான். தனது நடிப்பால் மக்களின் மனங்களை வென்றவர் விஜயகாந்த்.
திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மக்கள் உள்ளங்களில் நிலை கொண்டுள்ளன. விஜயகாந்த் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்ல; அரசியலுக்கும், மக்களுக்கும் பெரும் இழப்பு. அரசியல்வாதியாக தேசிய நலனை முன்னிறுத்தினார் விஜயகாந்த். அனைத்தையும் விட தேசத்தை விஜயகாந்த் அதிகம் நேசித்தார்" என்று பிரதமர் மோடி கூறினார்.
Related Tags :
Next Story