பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஜேஇஇ, நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான பணிப்பலன் சார்ந்த கோரிக்கைகளை இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க ஏதுவாக "குறைதீர் புலம்" செயலியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: :
தீபாவளிக்குப் பின் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். ஜேஇஇ, நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும். ஆசிரியர்கள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.
Related Tags :
Next Story