அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் முறித்துக்கொண்டாலும் திமுக தான் வெற்றிபெறும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் முறித்துக்கொண்டாலும் திமுக தான் வெற்றிபெறும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் முறித்துக்கொண்டாலும் திமுக தான் வெற்றிபெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து பல்வேறு கட்சித்தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலில் கூறி இருப்பதாவது; அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொண்டாலும், முறித்துக்கொண்டாலும் திமுக தான் வெற்றிபெறும். அதிமுகவின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது.

தற்போது பொய்யாக கூட்டணி இல்லை என்பார்கள்.. ஆனால் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்துக்கொள்வார்கள்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story