கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x

சென்னை தாம்பரம் அருகே கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன்குமார் (வயது 22). இவர், சென்னை தாம்பரம் அடுத்த வேங்கைவாசலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் கடந்த 2 மாதங்களாக அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சந்தன்குமார், கீழ் தளத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தரையில் தேங்கி நின்ற தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இது தெரியாமல் அந்த தண்ணீரில் கால் வைத்த சந்தன்குமார் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story