மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி சாவு - நண்பர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி சாவு - நண்பர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி சாவு - நண்பர் படுகாயம்

சென்னை

சென்னை முகப்பேர் 1-வது பிளாக்கில் வசித்து வந்தவர் கருப்புசாமி (வயது 28). காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர் மோகன சுந்தரம் (38) என்பவரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூரை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

திருவள்ளூர் நெடுஞ்சாலை வழியாக போளிவாக்கம் தனியார் தொழிற்சாலை அருகே வந்்த போது எதிரே வந்த தனியார் கம்பெனியின் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே கருப்புசாமி பரிதாபமாக இறந்தார். மோகன சுந்தரம் படுகாயமடைந்தார். இந்த விபத்தை கண்ட தனியார் பஸ் டிரைவர், தப்பி ஓடி விட்டார்.

Next Story