பெண்ணிடம் 3 பவுன் நகை திருடிய வாலிபர் கைது


பெண்ணிடம் 3 பவுன் நகை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 3 பவுன் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கடுக்கரை பகுதியை சேர்ந்த ஆறுமுகபெருமாள் மனைவி மாணிக்கரசி (வயது 45). இவர் சென்னையில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு அங்கிருந்து நாகர்கோவில் புறப்படும் சிறப்பு ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தார். அப்போது நேற்று முன்தினம் காலை வள்ளியூர்- ஆரல்வாய்மொழி இடையே வந்தபோது மாணிக்கரசி கழிவறைக்கு சென்று இருக்கைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பையில் வைத்திருந்த 3 பவுன் நகையை வாலிபர் ஒருவர் திருடிவிட்டு தப்பி ஓடினார். நகையை பையில் இருந்து திருடி சென்ற திருடனை கண்டதும் மாணிக்கரசி கூச்சலிட்டார். உடனே இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ரெயில் ஆரல்வாய்மொழி நிலையம் வந்தடைந்ததும், போலீசார் ரெயில் முழுவதும் சோதனை செய்தனர். அப்போது ரெயிலின் கடைசி பெட்டியில் இருந்து தப்பி ஓட முயன்ற வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்தனர். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த ராஜா (வயது 19) என்பதும், மாணிக்கரசியின் பையில் இருந்த 3 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story