விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு


விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 March 2021 3:00 AM IST (Updated: 15 March 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை, 

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு காட்டுமன்னார்கோவில், வானூர், அரக்கோணம், செய்யூர், திருப்போரூர், நாகப்பட்டினம் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த 6 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 இடங்களில் வேட்பாளர்களை அறிவிக்கிறோம்.

1.காட்டுமன்னார் கோவில் (தனி) - சிந்தனை செல்வன்

2.வானூர் (தனி) - வன்னி அரசு

3.அரக்கோணம் (தனி) - கவுதமசன்னா

4.செய்யூர் (தனி) - பனையூர் பாபு

5.திருப்போரூர் (பொது) - எஸ்.எஸ்.பாலாஜி

6.நாகப்பட்டினம் (பொது) - ஆளூர் ஷா நவாஸ்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தனிச்சின்னம்

6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் தனிச்சின்னத்தில் போட்டியிட இருக்கிறது.

Next Story