தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: பாஜக சார்பாக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு + "||" + Puducherry Assembly Election: BJP announces candidates for 9 constituencies

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: பாஜக சார்பாக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: பாஜக சார்பாக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள புதுச்சேரியைப் பொறுத்தவரையில், காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. அதேபோல, என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காமராஜ்நகர் - ஜான்குமார்

மண்ணாடிப்பட்டு - நமச்சிவாயம்

மணவெளி - ஏம்பலம் செல்வம்

லாஸ்பேட்டை - சாமிநாதன்

திருநள்ளாறு - ராஜசேகர்

நிரவி - மனோகர் 

காலாப்பட்டு - கல்யாணசுந்தரம் 

நெல்லித்தோப்பு - ரிச்சர்ட்

ஊசுடு - சாய் ஜெ.சரவணக்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. எதிர்காலத்தில் பாஜகவுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைக்கலாம்: ராம்தாஸ் அத்வாலே
மராட்டியத்தில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைக்கக்கூடும் என்று ராம்தாஸ் அத்வாலா தெரிவித்துள்ளார்.
2. உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் சுவேந்து அதிகாரி சந்திப்பு
உள்துறை மந்திரி அமித்ஷாவை மே.வங்காள சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் சுவேந்து அதிகாரி இன்று சந்தித்துப் பேசினார்.
3. கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக ராஜினமா செய்வேன்: எடியூரப்பா பேட்டி
கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக ராஜினமா செய்வேன் என கர்நாடகா முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
4. கொரோனா காலத்திலும் பா.ஜனதாவுக்கு ஆட்சி வெறி-உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்
கொரோனா தொற்று காலத்திலும் பா.ஜனதா ஆட்சி வெறி பிடித்து அலைவதாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கினார்.
5. அசாம் மாநில முதல் -மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவியேற்பு
அசாம் மாநிலத்தின் புதிய முதல்- மந்திரியாக ஹிமந்த விஸ்வ சா்மா இன்று பதவியேற்றுக்கொண்டார்.