புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள புதுச்சேரியைப் பொறுத்தவரையில், காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அரியாங்குப்பம் - ஜெயமூர்த்தி,
மணவெளி - அனந்தராமன்,
ஏம்பலம் - கந்தசாமி,
நெட்டப்பாக்கம் - விஜயவேணி,
நெடுங்காடு - மாரிமுத்து,
திருநள்ளாறு - கமலக்கண்ணன்
காரைக்கால் வடக்கு - ஏ.வி.சுப்ரமணியன்,
மாஹே - ரமேஷ்,
ஊசுடு - கார்த்திகேயன்,
கதிர்காமம் - செல்வநாதன்,
இந்திராநகர் - கண்ணன்
முத்தியால்பேட்டை - செந்தில்குமரன்,
காமராஜ்நகர் - ஷாஜஹான்,
லாஸ்பேட்டை - வைத்தியநாதன் ஆகியோர் போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story