ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுக பொய் பிரசாரம் - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி


ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுக பொய் பிரசாரம் - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
x
தினத்தந்தி 17 March 2021 5:01 PM IST (Updated: 17 March 2021 5:01 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுக பொய் பிரசாரம் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

ஜெயலலிதாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதற்கு, மரணம் நேர்வதற்கு திமுக காரணம் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு திமுகவினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுக பொய் பிரசாரம் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, “ஜெயலலிதா மறைவுக்கு திமுகவின் மேல்முறையீடு வழக்குகள்தான் காரணம் என்பது திட்டமிட்ட பொய். அந்த பொய் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாது. ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கில் திமுக மேல்முறையீடு செய்யவில்லை. ஜெயலலிதா மீதான வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு அப்போது பாமக தான் கோரிக்கை வைத்தது” என்று தெரிவித்தனர்.

Next Story