தமிழகத்தில் முதல் முறையாக அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்: பிரியங்கா காந்தி 3-ந் தேதி நாகர்கோவில் வருகை


தமிழகத்தில் முதல் முறையாக அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்: பிரியங்கா காந்தி 3-ந் தேதி நாகர்கோவில் வருகை
x
தினத்தந்தி 31 March 2021 10:26 PM GMT (Updated: 31 March 2021 10:26 PM GMT)

தமிழகத்தில் முதல் முறையாக அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்: பிரியங்கா காந்தி 3-ந் தேதி நாகர்கோவில் வருகை தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

நாகர்கோவில், 

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 3-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குமரி மாவட்டம் வருகை தருகிறார். அவர் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் காங்கிரஸ்-தி.மு.க. சார்பில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சட்டசபை பொதுத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார். பிரியங்கா காந்தி தமிழகத்தில் முதன் முதலாக பங்கேற்கும் அரசியல் நிகழ்ச்சி இதுவாகும்.

பிரியங்கா காந்தி 3-ந் தேதி அன்று காலை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story