உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வர கடவுளிடம் மன்றாடுவோம் - போப் பிரான்சிஸ்


உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வர கடவுளிடம் மன்றாடுவோம் - போப் பிரான்சிஸ்
x
தினத்தந்தி 27 Feb 2022 2:18 PM GMT (Updated: 27 Feb 2022 2:18 PM GMT)

சாம்பல் புதன் நோன்பு தினத்தில் உக்ரைனின் அமைதிக்காக பிரார்த்தனை செய்ய போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

வாடிகன் சிட்டி,

கடந்த பிப்ரவரி 24 -ஆம் தேதி ரஷிய அதிபர் புதின், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதல் நடத்தி உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் அங்கு தாக்குதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் போப் பிரான்சிஸ், உக்ரைனில் போர் முடிவுக்கு வர நாம் இறைவனிடம் மன்றாடுவோம் என்று கூறியுள்ளார். மேலும் வருகிற மார்ச் 2-ந்தேதி சாம்பல் புதன் அன்று உக்ரைனில் அமைதி பிறக்க அந்த நோன்பு தினத்தில் அனைவரும் பிரார்த்திப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'உக்ரைனில் துன்புறும் மக்களுக்கு அருகில் இருக்கவும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்பதை உணர்ந்துகொள்ளவும் வருகிற மார்ச் 2, சாம்பல் புதன் அன்று, உக்ரைனின் அமைதிக்காக பிரார்த்தனை மற்றும் நோன்பு தினத்தில் பங்கேற்க அனைவருக்கும் எனது அழைப்பை விடுக்கிறேன். போரை முடிவுக்கு கொண்டுவர கடவுளிடம் மன்றாட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

Next Story