ரஷிய தாக்குதலால் இதுவரை உக்ரைனில் இருந்து 50 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர் - ஐ.நா


ரஷிய தாக்குதலால்  இதுவரை உக்ரைனில் இருந்து 50 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர் - ஐ.நா
x
தினத்தந்தி 15 April 2022 2:11 PM GMT (Updated: 15 April 2022 2:11 PM GMT)

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 51-வது நாளாக நீடித்து வருகிறது.

கீவ்,

உக்ரைன் மீது கடந்த 51 நாட்களாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால், உக்ரைனில்  பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். 

போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷியாவின் எல்லையோர கிராமங்களை குறிவைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. மேலும், உக்ரைனுக்கு பதிலடியாக அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. 

இந்த போரினால், பெரிதும்  பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 24 முதல் உக்ரைனில் இருந்து இதுவரை 50 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவையின் ஐநாவுக்கான முகமை தெரிவித்துள்ளது. 


Next Story