எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்ரேல், காசா மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் - எலான் மஸ்க் அறிவிப்பு


எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்ரேல், காசா மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் - எலான் மஸ்க் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2023 10:19 AM IST (Updated: 22 Nov 2023 10:51 AM IST)
t-max-icont-min-icon

இந்த போரில் இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், 4 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வந்துள்ளது.

இந்த போரில் இதுவரை 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

இந்தநிலையில், உலக கோடீஸ்வரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், எக்ஸ் வலைதளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story