கனமழை காரணமாக ஆஸ்திரேலியாவில் விமான சேவை பாதிப்பு


கனமழை காரணமாக ஆஸ்திரேலியாவில் விமான சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2023 7:29 AM IST (Updated: 26 Dec 2023 7:46 AM IST)
t-max-icont-min-icon

சிட்னி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் வெளி மாகாணங்களுக்கும் புறப்பட தயாராக இருந்த 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண தலைநகரான சிட்னியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் உலகின் பரபரப்பு மிகுந்த விமான நிலையங்களில் ஒன்றான சிட்னி விமான நிலையத்திற்குள் நீர் புகுந்து கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் சிட்னி நகரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சிட்னி விமான நிலையத்தில் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அந்த நாட்டின் விமான போக்குவரத்து துறை அறிவித்தது.இதனால் சிட்னி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் வெளி மாகாணங்களுக்கும் புறப்பட தயாராக இருந்த 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஓடுதளத்தில் தண்ணீரில் மூழ்கியபடி அவை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் வெளிநாடுகளில் இருந்து சிட்னிக்கு வர முயன்ற 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் பிரிஸ்பேன், மெல்போர்ன் நகர் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட சிட்னிக்கு வர இருந்தவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள்.

1 More update

Next Story