சீனா-கென்யா கூட்டு ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்ட உயர்தர மக்காச்சோளம் - அமோக விளைச்சலை கொடுப்பதாக தகவல்


சீனா-கென்யா கூட்டு ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்ட உயர்தர மக்காச்சோளம் - அமோக விளைச்சலை கொடுப்பதாக தகவல்
x

சீனா-கென்யா கூட்டு ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்ட உயர்தர மக்காச்சோளம், கென்யாவில் சோதனை முறையில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டது.

நைரோபி,

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் 4 முறை தொடர்ச்சியாக மழைக்காலம் பொய்த்துப் போனதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனா மற்றும் கென்யாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட உயர்தர மக்காச்சோள பயிர்கள் கென்யாவில் கடந்த மே மாதம் சோதனை முறையில் பயிரிடப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 2,700 கிலோ மக்காச்சோளம் விளைச்சல் கிடைக்கும் என்றும், மற்ற பகுதிகளில் கிடைக்கும் விளைச்சலை விட இது 50 சதவீதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆதரவையும், நிதி உதவியையும் சீன அறிவியல் கழகம் வழங்கியுள்ளது. சீனாவின் உதவியுடன் இந்த வறட்சி காலத்தில் அதிக மக்காச்சோள விளைச்சல் கிடைக்கும் என்று நம்புவதாக சீனா-ஆப்பிரிக்கா கூட்டு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


Next Story