மெக்சிகோவை தாக்கிய 'ஓடிஸ்' சூறாவளி; 27 பேர் உயிரிழப்பு, 4 பேர் மாயம்


மெக்சிகோவை தாக்கிய ஓடிஸ் சூறாவளி; 27 பேர் உயிரிழப்பு, 4 பேர் மாயம்
x

Image Courtesy : AFP

சூறாவளி கரையை கடந்த அகாபுல்கோ பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

மெக்சிகோ சிட்டி,

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் 'ஓடிஸ்' சூறாவளி நேற்று முன்தினம் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை மற்றும் அதிவேக காற்று காரணமாக மெக்சிகோவின் கடற்கரை பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது.

சூறாவளி கரையை கடந்த அகாபுல்கோ பகுதியில் மரங்கள் சாய்ந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story