பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்


பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்
x

4.5 மில்லியன் பெண்களில் ஒருவர் மட்டுமே இவ்வளவு அரிதாக கர்ப்பம் தரிப்பதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையில் பிரசவ வலி காரணமாக முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத்(27) கடந்த 18-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் 19 தேதி காலை 6 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக டான் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் ஆறு குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவர் பெற்றெடுத்துள்ளார்.

பிறந்த குழந்தைகளில் நான்கு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் என்றும் ஒவ்வொன்றும் இரண்டு கிலோவுக்கு குறைவான எடை கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு குழந்தைகளும் அவர்களின் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பர்சானா தெரிவித்தார். இருப்பினும் குழந்தைகளை டாக்டர்கள் இன்குபேட்டரில் வைத்துள்ளனர். .4.5 மில்லியன் பெண்களில் ஒருவர் மட்டுமே இவ்வளவு அரிதாக கர்ப்பம் தரிப்பதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story