"இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிக்கும்" - பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட் சபதம்


இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிக்கும் - பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட் சபதம்
x

Image Courtacy: ANI

தினத்தந்தி 4 Nov 2023 10:15 PM GMT (Updated: 5 Nov 2023 1:01 AM GMT)

இஸ்ரேலியப் படைகள் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட் தெரிவித்தார்

டெல் அவிவ்,

இஸ்ரேலியப் படைகள் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரை கண்டுபிடித்து ஒழித்துக்கட்டுவார்கள் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் சபதம் செய்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களில் வடக்கு எல்லை மற்றும் தெற்கில் சுற்றுப்பயணம் செய்த பின், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எவ்வளவு காலம் எடுத்தாலும் வெற்றி பெறும் வரை போராட படைகள் தயாராக இருப்பதாக ரிசர்வ் படை வீரர்கள் என்னிடம் கூறினர். ஒரு வருடம் எடுத்துக் கொண்டாலும், இஸ்ரேல் தன் பணியை கண்டிப்பாக முடித்துவிடும்.

எல்லாவற்றையும் செய்யத் தயாராக இருக்கும் போராளிகள் இங்கு உள்ளனர். இந்த உறுதியானது இஸ்ரேலின் முழு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது.

இஸ்ரேலியப் படைகள் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. தெற்கு மற்றும் வடக்கில் இருந்து காசா நகரைத் தாக்கி நகர்ப்புறங்களுக்குள் நுழைந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் சுரங்கப்பாதைகளில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வருகிறது. மேலும் பதுங்கு குழிகள், சுரங்கங்கள் மற்றும் பலவற்றை அழித்து வருகிறது" என்று பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறினார்.


Next Story