முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
x

Image Courtesy : @CMOTamilnadu twitter

திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் தொழிற்சாலையை ரூ.83 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

டோக்கியோ,

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள ஒசாகா மாகாணத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர் பேக் இன்ஃப்லேட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை 83 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் இயக்குனர் கென் பாண்டோவும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விஷ்ணுவும் கையெழுத்திட்டனர்.Next Story