கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாதுகாப்பு வழங்கும் பாக். ராணுவம்


கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாதுகாப்பு வழங்கும் பாக். ராணுவம்
x

Image Courtesy: AFP

கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பு வழங்க உள்ளது.

இஸ்லமாபாத்,

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கத்தாரில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பு அளிக்க உள்ளது. இதற்கான ஒப்புதலை பாகிஸ்தான் அமைச்சரவை அளித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் விரைவில் கத்தார் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் விரைவில் கத்தார் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

முன்னதாக, கத்தாரில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளதாக நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு 3 ஆயிரத்து 250 வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த துருக்கி முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story