உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம் - அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த புதின்


உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம் -  அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த புதின்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 13 March 2024 2:34 PM IST (Updated: 13 March 2024 5:01 PM IST)
t-max-icont-min-icon

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளதாக புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கீவ்,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா போர் தொடுத்து வருகிறது.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, அணு ஆயுத போரைத்தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். ஆனாலும் நாங்கள் அதற்கு தயாராகவே உள்ளோம். என்றார்.

அப்போது அவரிடம் உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து சிந்தித்தது உண்டா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு புதின், அதற்கான அவசியம் இருந்ததில்லை. உக்ரைனில் மாஸ்கோ அதன் இலக்கை அடையும். பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். என்றார்

இவ்வாறு அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது தொடர்பாக புதின் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story