இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பிய அரிசி மூட்டைகள் வவுனியா பகுதியில் பதுக்கல் - கிராம மக்கள் அதிர்ச்சி


இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பிய அரிசி மூட்டைகள் வவுனியா பகுதியில் பதுக்கல் - கிராம மக்கள் அதிர்ச்சி
x

வவுனியா பகுதியில் தமிழக அரசு அனுப்பி அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கிராம மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொழும்பு,

பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு சார்பில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் இந்த உதவிப்பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள வவுனியா பகுதியில் மதுராநகர் கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் தமிழக அரசு அனுப்பி அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை, கிராம மக்கள் கண்டுபிடித்துள்ளனர். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட அரிசி மூட்டைகள் வண்டுகள் நிறைந்து எதற்கு உதவாத வகையில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



1 More update

Next Story