ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் இடம்பெறும் ரஷியாவின் முயற்சி மீண்டும் தோல்வி


ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் இடம்பெறும் ரஷியாவின் முயற்சி மீண்டும் தோல்வி
x

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் இடம்பெறும் ரஷியாவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது.

வாஷிங்டன்,

உக்ரைன் உடனான ரஷியா போர் தொடங்கியதில் இருந்தே பல்வேறு அங்கீகாரங்களை ரஷியா இழந்து வந்தது. மேலும் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இருந்தும் வெளியேற்றப்பட்டது. இதில் தன்னை இணைத்துக்கொள்ள ரஷியா போராடி வந்தாலும் அதில் தோல்வியையே சந்தித்தது.

இந்தநிலையில் மனித உரிமைகள் அமைப்பின் 2024-26 ஆண்டிற்கான உறுப்பினர்கள் தேர்தல் ஐ.நா. சபையில் நடந்தது. கிழக்கு ஐரோப்பா பிராந்தியத்துக்காக ஒதுக்கப்பட்ட 2 இடங்களுக்கு ரஷியா, பல்கேரியா, அல்பேனியா ஆகியவை போட்டியிட்டன. ஐ.நா பொதுச்சபையை சேர்ந்த உறுப்பினர் நாடுகளை முன்னிறுத்தும் வகையில் 193 பிரதிநிதிகள் ரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.

இதில் பல்கேரியாவுக்கு ஆதரவாக 160 வாக்குகளும், அல்பேனியாவுக்கு ஆதரவாக 123 வாக்குகளும் கிடைத்தன. ரஷியாவுக்கு ஆதரவாக 83 வாக்குகளே கிடைத்தது. இதனால் ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பில் இடம்பெறும் ரஷியாவின் முயற்சி மீண்டும் தோல்வி அடைந்தது.


Next Story