ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; ஹங்கேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு


ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; ஹங்கேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு
x

ஹங்கேரியில் ரஷியா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

புடாபெஸ்ட்,

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததை கண்டித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷியா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்தன. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததோடு, ரஷியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில், ரஷியா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஹங்கேரியில் தற்போது பணவிக்கம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு 22.5% ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, ஹங்கேரி அரசு விலை உச்சவரம்புகளை நிர்ணயம் செய்தது. இதன் காரணமாக அங்கு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பான் மேற்கொண்ட நடவடிக்கைகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என அந்நாட்டு வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

1 More update

Next Story