சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் தள்ளிவைப்பு


சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் தள்ளிவைப்பு
x

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரும் 21-ம் தேதி பாகிஸ்தான் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ரியாத்,

பாகிஸ்தானின் நட்பு நாடாக சவுதி அரேபியா உள்ளது. பாகிஸ்தானுக்கு அவ்வப்போது பெருமளவு கடனுதவிகளை சவுதி வழங்கி வருகிறது.

இதனிடையே, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரும் 21-ம் தேதி பாகிஸ்தான் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பயணத்தின் போது முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு 4.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் போராட்டத்தில் குதித்துள்ளார். இதனால், பாகிஸ்தான் அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story