இங்கிலாந்து: கேளிக்கை விடுதியில் திடீர் துப்பாக்கிச்சூடு- ஒருவர் உயிரிழப்பு


இங்கிலாந்து: கேளிக்கை விடுதியில் திடீர் துப்பாக்கிச்சூடு- ஒருவர் உயிரிழப்பு
x

அங்கிருந்த ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டி உள்ள வலாசே என்னும் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ஏராளமானோர் கூடி இருந்தனர்.

அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார். அவர் சுட்டதில், இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story