சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை,

சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இன்று சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் புத்தரச்சல் கிராமத்தில், 21 அடி உயரமுள்ள ஸ்வர்ண கால பைரவருக்கு திரிசூலம் சாற்றும் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதே போல் நாகை மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி உள்ளிட்டவைகளை எடுத்து வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். கரூர் மாவட்டம் புகழூர் நானபரப்பு மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.




Next Story