ஆசிய கோப்பை; மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்..!!


ஆசிய கோப்பை; மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்..!!
x

image courtesy;twitter/@TheRealPCB

தினத்தந்தி 14 Sep 2023 9:35 AM GMT (Updated: 14 Sep 2023 9:39 AM GMT)

இலங்கை - பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

சூப்பர்4 சுற்றின் 5-வது லீக்கில் இறுதிப்போட்டியை முடிவு செய்யும் முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், பாகிஸ்தானும் இன்று (வியாழக்கிழமை) மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இந்தியாவுக்கு எதிராக தோற்றும், வங்காளதேசத்தை வீழ்த்தியும் தலா 2 புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. எனவே இதில் வெற்றி காணும் அணி சிக்கலின்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story