ஆசிய கோப்பை; பாகிஸ்தானுக்கு எதிராக தோனியின் 15 வருட சாதனையை தகர்த்த இஷான் கிஷன்...!


ஆசிய கோப்பை; பாகிஸ்தானுக்கு எதிராக தோனியின் 15 வருட சாதனையை தகர்த்த இஷான் கிஷன்...!
x

Image Courtesy: @BCCI

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இஷான் கிஷன் 82 ரன்கள் அடித்தார்.

பல்லாகெலெ,

ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 48.5 ஓவரகளில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், பாண்ட்யா இணை அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இருவரும் அரைசதம் அடித்து அடித்தனர். இதில் இஷான் கிஷன் 82 ரன்னிலும், பாண்ட்யா 87 ரன்னிலும் அவுட் ஆகினர். இவர்களது பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 266 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இஷான் கிஷன் 82 ரன்கள் அடித்ததன் மூலம் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தோனியின் 15 வருட சாதனையை முறியடுத்துள்ளார். அதாவது, ஆசிய கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்கள் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் 15 வருட சாதனையை இஷான் கிஷன் தகர்த்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு தோனி 76 ரன்கள் எடுத்ததே சாதனையாக நீடித்தது. அந்த 15 வருட சாதனையை இஷான் கிஷன் முறியடித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள் விவரம்;

1. இஷான் கிஷன் : 82 (2023)

2. எம்எஸ் தோனி : 76 (2008)

3. சுரிந்தர் கண்ணா : 56 (1984)

4. எம்எஸ் தோனி : 56 (2010)


Next Story