ஆசிய கோப்பை; மழையால் ஓவர்கள் குறைப்பு..! பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு..!


ஆசிய கோப்பை; மழையால் ஓவர்கள் குறைப்பு..! பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு..!
x

image courtesy;twitter/@TheRealPCB

தினத்தந்தி 14 Sep 2023 11:56 AM GMT (Updated: 14 Sep 2023 12:06 PM GMT)

இலங்கை - பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

சூப்பர்4 சுற்றின் 5-வது லீக்கில் இறுதிப்போட்டியை முடிவு செய்யும் முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், பாகிஸ்தானும் இன்று (வியாழக்கிழமை) மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இந்தியாவுக்கு எதிராக தோற்றும், வங்காளதேசத்தை வீழ்த்தியும் தலா 2 புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. எனவே இதில் வெற்றி காணும் அணி சிக்கலின்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் அங்கு மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து மழையால் 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு 45 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸில் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கான பிளெயிங் 11 பின்வருமாறு;-

பாகிஸ்தான்: பகார் ஜமான், அப்துல்லா ஷபீக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஜமான் கான்

இலங்கை: பதும் நிசங்கா, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), துனித் வெல்லலகே, மதிஷ் தீக்ஷனா, பிரமோத் மதுஷன், மதீஷா பதிரனா


Next Story