ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம்...பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு...!


ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம்...பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு...!
x

Image Tweet : Pakistan Cricket

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனை பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது.

கராச்சி,

6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்ட 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஒரு பிரிவிலும் இடம் பெற்றன.

இந்த அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

இதையடுத்து ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதலாவது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் பாகிஸ்தானின் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான தங்களது பிளேயிங் லெவனை பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது. இதில் கடந்த ஆட்டத்தில் இடம் பிடித்த முகமது நவாஸ்க்கு பதிலாக பஹீம் அஷ்ரப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்:-

பக்கார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆஹா, இப்டிகார் அகமது, ஷதாப் கான் (துணை கேப்டன்), பஹீம் அஷ்ரப், ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராப்.



Next Story