ரோகித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்


ரோகித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
x

ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிக சராசரியாக இருந்ததாக மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி முன்னிலை பெற்றது. ஆனால் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து நிர்ணயித்த 231 ரன்களை சேசிங் செய்த இந்தியா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் 164/5 என சரிந்த இங்கிலாந்து 420 ரன்கள் அடிக்கும் அளவுக்கு ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்ததாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். குறிப்பாக அழுத்தமான நேரத்தில் பீல்டர்களை மாற்றி விக்கெட்டுகளை எடுக்கும் யுக்தி ரோகித்துக்கு தெரியவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிகமிக சராசரியாக இருந்ததாக நான் கருதுகிறேன். களத்தில் அவர் சரியான திட்டங்களை தீட்டியதாகவோ அல்லது பந்து வீச்சு மாற்றங்களில் முனைப்புடன் இருந்ததாகவோ எனக்கு தெரியவில்லை. அதிலும் குறிப்பாக போப் அடித்த ஸ்வீப் அல்லது ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை நிறுத்துவதற்கு அவரிடம் பதில் இல்லை. ஒரு வீரர் லெக் சைட் திசையில் ஸ்வீப் அடிக்கும்போது ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஷேன் வார்னே அரவுண்ட் தி விக்கெட் திசையில் சென்று அவுட்டாக்க முயற்சிப்பார்.

ஆனால் அப்படி இந்திய அணியிலிருந்து யாரும் முயற்சித்ததை நான் பார்க்கவில்லை. அது இங்கிலாந்துக்கு மிகவும் எளிதாக அமைந்தது. அதை பயன்படுத்தி இங்கிலாந்து எளிதாக பவுண்டரிகள் அடித்தது. அப்போது பீல்டர்களை பரவலாக நிறுத்திய ரோகித் சர்மா எங்களுடைய பவுலர்கள் சிறப்பான பந்துகளை வீசியும் அடி வாங்குகிறார்கள் என்பதுபோல் செயல்பட்டார்" என்று கூறினார்.


Next Story