ஆஷஸ் கடைசி டெஸ்ட்; டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு


ஆஷஸ் கடைசி டெஸ்ட்; டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு
x

image courtesy;twitter/@ICC

தினத்தந்தி 27 July 2023 10:01 AM GMT (Updated: 27 July 2023 10:12 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்டில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது. எற்கனவே ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்துக் கொண்டது. இனி கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை என்ற நிலையில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை நீட்டிக்கும் உத்வேகத்துடன் இங்கிலாந்து ஆயத்தமாகி வருகிறது.

மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி கோப்பையை தனதாக்கினாலும் தொடரை 3-1 என்ற கணக்கில் வெல்வதில் தீவிரம் காட்டுகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இங்கிலாந்து : ஜாக் க்ராலி, பென் டக்கெட், மொயின் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ்(கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுச்சனே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி(கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ்(கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், டாட் மர்பி.


Next Story