நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 310 ரன்கள் சேர்ப்பு!


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 310 ரன்கள் சேர்ப்பு!
x

image courtesy; twitter/ @ICC

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

டாக்கா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஜாகிர் ஹசன் களமிறங்கினர். இதில் ஜாகிர் ஹசன் 12 ரன்கள் அடித்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதபின் களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மஹ்முதுல் ஹசன் ஜாய் நிலைத்து விளையாடினார். அவருக்கு மொமினுல் ஹக் சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்தார். மொமினுல் ஹக் 37 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் யாரும் நிலைக்கவில்லை.அடுத்தடுத்து விரைவில் ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி நிலைத்து நின்று விளையாடிய மஹ்முதுல் ஹசன் ஜாய் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். வங்காளதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. தைஜுல் இஸ்லாம் 8 ரன்களிலும், ஷோரிபுல் இஸ்லாம் 13 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.


Next Story