நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; வங்காளதேச அணியின் முக்கிய வீரர் விலகல்!


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; வங்காளதேச அணியின் முக்கிய வீரர் விலகல்!
x

image courtesy; AFP

வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது.

டாக்கா,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்து அணி இந்த மாத இறுதியில் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

உலகக்கோப்பைக்கு முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பின்னர் உலகக்கோப்பை தொடரை கணக்கில் கொண்டு டெஸ்ட் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தோள்பட்டை காயம் காரணமாக வங்காளதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது விலகியுள்ளார். முன்னதாக நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் காயம் காரணமாக அவர் சில ஆட்டங்களில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story