டிஎன்பிஎல்: திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு..!


டிஎன்பிஎல்: திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு..!
x

image courtesy: TNPL twitter

திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இந்த நிலையில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

திருப்பூர் அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி அடைந்துள்ளது. மதுரை அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி,1 தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story