பெண்கள் கிரிக்கெட்; இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது - வெளியான தகவல்


பெண்கள் கிரிக்கெட்; இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது - வெளியான தகவல்
x

image courtesy; twitter/@BCCIWomen

தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உ:ள்ளது.

பெங்களூரு,

தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ஒரு நாள் போட்டிகள் ஜூன் 16, 19, 23-ந் தேதிகளிலும், 20 ஓவர் போட்டிகள் ஜூலை 5, 7, 9-ந் தேதிகளிலும் பெங்களூருவில் நடைபெறுகிறது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஜூன் 28-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story