மகளிர் பிரீமியர் லீக்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு


மகளிர் பிரீமியர் லீக்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு
x

இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

மும்பை,

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி மும்பை, நவி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். `லீக்' முடிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியிலும், 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் ஆடும்.

இந்நிலையில் இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.


Next Story