உலகக்கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தான் - வங்காளதேச ஆட்டத்தின்போது மைதானத்தில் பாலஸ்தீன கொடியை காட்டிய 4 பேர் கைது

Image Courtesy: Twitter
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
கொல்கத்தா,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
இந்நிலையில் நேற்றையை ஆட்டத்தின்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீனக் கொடியை காட்டியதற்காக 4 பேரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது கேட் 6 மற்றும் பிளாக் G1 பகுதிகளில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை மைதானத்தில் இருந்த போலீசார் உடனடியாக கண்டறிந்து அவர்களை கைது செய்தனர். அதன் பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பாலி, எக்பால்பூர் மற்றும் கராயா பகுதிகளில் வசிப்பவர்கள் என்று தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் எந்தவித கோஷமும் எழுப்பவில்லை என்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் நால்வரும் நள்ளிரவில் விடுவிக்கப்பட்டனர்.






