ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்


ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்
x

இந்திய அணி லீக் ஆட்டத்தில் தென்கொரியாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இருப்பினும் கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், படகுபந்தயம் உள்ளிட்ட போட்டிகள் மட்டும் முன்னதாகவே தொடங்கி நடந்து வருகிறது.

இதில் கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 21 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்று இருந்தது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 2-வது லீக்கில் இந்திய அணி, வங்காளதேசத்துடன் (பகல் 1.30 மணி) மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களம் காணுகிறது.

கால்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் கலந்து கொண்டுள்ள 16 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று சீன தைபேயை (மாலை 5 மணி) சந்திக்கிறது.


Next Story