ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்; சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்; சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
x

Image Courtesy: @IndSuperLeague

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - பெங்களூரு அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் பெங்களூரு அணியின் ரியான் வில்லியம்ஸ் 62வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இதையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் ஆட்ட நேர முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story